Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Vaikarai Meenatchiyo

From Aayiram Kannudayaal · 1986

Lyricist
Vaali
Singer
Vani Jairam
Music director
Shankar Ganesh
Details
Aayiram Kannudayaal1986

Lyrics & meaning

Tamil lyrics

வைகை கரை மீனாட்சியோ

வாசல் வந்த காமாட்சியோ

தெற்கு சீமை காற்று வந்து

தொட்டில் கட்டி தாலாட்டுது

என் வீட்டு ராஜாங்கம் உன் கையிலே

தெய்வங்கள் பேசாதோ

உன் சொல்லிலே முத்தாரமே.....

வைகை கரை மீனாட்சியோ

வாசல் வந்த காமாட்சியோ...

ராமேஸ்வரம் தீர்த்தமாடி

ரங்கநாதன் பேரப் பாடி

மாரியாத்தா கோயிலுக்கு

மா விளக்கு நானெடுத்து

பிள்ளை வரம் வேணுமின்னு

பெருமாளுக்கு பொங்கல் வச்சேன்

பொங்கல் வச்ச புண்ணியத்தால்

பொன்னாரமே நீயும் வந்தாய்

வைகை கரை மீனாட்சியோ

வாசல் வந்த காமாட்சியோ.......

தெற்கு சீமை காற்று வந்து

தொட்டில் கட்டி தாலாட்டுது

என் வீட்டு ராஜாங்கம் உன் கையிலே

தெய்வங்கள் பேசாதோ

உன் சொல்லிலே முத்தாரமே.....

மல்லிகையால் மெத்தையிட்டால்

வண்டு வந்து மொய்க்குமின்னு

மாணிக்கத்தால் மெத்தையிட்டால்

மேனியெல்லாம் நோகுமின்னு

வைரங்களால் மெத்தையிட்டால்

நட்சத்திரம் ஏங்குமின்னு

நெஞ்சத்திலே மெத்தையிட்டேன்

நீலக் குயில் நீ ஆடம்மா.....

வைகை கரை மீனாட்சியோ

வாசல் வந்த காமாட்சியோ.......

தெற்கு சீமை காற்று வந்து

தொட்டில் கட்டி தாலாட்டுது

என் வீட்டு ராஜாங்கம் உன் கையிலே

தெய்வங்கள் பேசாதோ

உன் சொல்லிலே முத்தாரமே.....

ஆஹ ஹா அஹ ஆஹ ஹா.....ம்ம்ம்.....ம்ம்.....

Keep listening

More from Aayiram Kannudayaal