Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Devan Thiruchabai Malargale

From Avar Enakke Sontham · 1977

Lyricist
Panchu Arunachalam
Singers
Poorani, Indhira
Music director
Ilayaraja
Details
Avar Enakke Sontham1977

Lyrics & meaning

Tamil lyrics

பெண் 1 :

தேவன் திருச்சபை மலர்களே...

பெண் 2 :

லல்லாலல லலலல

பெண் 1 :

வேதம் ஒலிக்கின்ற மணிகளே....

பெண் 2 :

லல்லாலல லலலல

பெண் 1 :

தேவன் திருச்சபை மலர்களே...

வேதம் ஒலிக்கின்ற மணிகளே....

போடுங்கள் ஓர்....புன்னகைக்கோலம்...

பாடுங்கள் ஓர்...இன்னிசை ராகம்

பெண் 1 :

{விண்மீனை உன்

கண்களில் பார்க்கிறேன்....

பொன்மானை உன்

நடையினில் காண்கிறேன்....} (2)

பெண் 1 :

எங்கள் அன்னை மேரியின்

பொங்கும் கருணை மழையிலே

என் செல்வமே என் தெய்வமே

பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே......

பெண்கள் :

தேவன் திருச்சபை மலர்களே...

வேதம் ஒலிக்கின்ற மணிகளே....

போடுங்கள் ஓர்.... புன்னகைக்கோலம்...

பாடுங்கள் ஓர்... இன்னிசை ராகம்

விசில் :

.................................

பெண் 1 :

கண்ணே மணியே

பொன்னெழில் மலர்களே....

அன்பே அமுதே

அருந்தவப் பயன்களே....

பெண் 2 :

கொஞ்சும் மழலை மொழியிலே

உள்ளம் மயங்க மயங்கவே

பொன்வண்டு போல் சில்வண்டு போல்

கவிப் பாடுங்கள் உலகம் மகிழவே....

பெண்கள் :

தேவன் திருச்சபை மலர்களே...

வேதம் ஒலிக்கின்ற மணிகளே....

போடுங்கள் ஓர்....புன்னகைக்கோலம்...

பாடுங்கள் ஓர்...இன்னிசை ராகம் .

Keep listening

More from Avar Enakke Sontham