Arasala Pirantha Magarasi
From Thozhan · 1960
- Lyricist
- A. Maruthakasi
- Singer
- A. G. Rathnamala
- Music director
- G. Ramanathan
- Details
- Thozhan1960
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
பெண் மற்றும் குழு :
அரசாளப் பிறந்த மகராசி
அழகான எங்கள் இளவரசி
அரசாளப் பிறந்த மகராசி
அழகான எங்கள் இளவரசி
அழியாத அன்பு வலை வீசி
உறவாடும் உனது முகராசி...
அழியாத அன்பு வலை வீசி
உறவாடும் உனது முகராசி..
அரசாளப் பிறந்த மகராசி
பெண் மற்றும் குழு :
வளையாத வீரம் புகழ் பாடும்
செல்வ வளஞ்சூழும் கன்னித் திருநாடு
வளையாத வீரம் புகழ் பாடும்
செல்வ வளஞ்சூழும் கன்னித் திருநாடு
நலங்காண எங்கள் மகராணி
வம்சக் கொடி வாழ வந்த களிப்போடு..
நலங்காண எங்கள் மகராணி
வம்சக் கொடி வாழ வந்த களிப்போடு..
பெண் மற்றும் குழு :
அரசாளப் பிறந்த மகராசி
அழகான எங்கள் இளவரசி
உறவாடும் உனது முகராசி...
அழியாத அன்பு வலை வீசி
அரசாளப் பிறந்த மகராசி
பெண் மற்றும் குழு :
புவி மீது நீயும் குறையேதுமின்றி
பலகாலம் வாழ்க பண்போடு
புவி மீது நீயும் குறையேதுமின்றி
பலகாலம் வாழ்க பண்போடு
பொன்னான உன்னைக் கண்ணாரக் காண
வருவார் உன் தந்தை அன்போடு...
பொன்னான உன்னைக் கண்ணாரக் காண
வருவார் உன் தந்தை அன்போடு..
பெண் மற்றும் குழு :
அரசாளப் பிறந்த மகராசி
அழகான எங்கள் இளவரசி
உறவாடும் உனது முகராசி...
அழியாத அன்பு வலை வீசி
அரசாளப் பிறந்த மகராசி
Keep listening
More from Thozhan
Thozhan
Thozhan
Thozhan
Thozhan
Thozhan
Thozhan