Nenjukkulle Singakkutti
From Pattakkathi Bhairavan · 1979
- Lyricist
- Kannadasan
- Singers
- P. Susheela, S. Janaki
- Music director
- Ilayaraja
- Details
- Pattakkathi Bhairavan1979
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி
நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்
நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி
நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்
நெறமோ செவப்பு
நெனச்சா இனிப்பு
நேத்திக்கு தூக்கமில்ல ஏண்டி
மச்சானோ அத்தானோ
மாயப் பொடி வச்சானோ
தொட்டானோ பட்டானோ
தூது சொல்லி விட்டானோ
நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி
நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்
ஆட விட்டுப் பாத்திருந்தா
காடு நடுங்கும்
அந்தியிலும் சந்தியிலும்
கண்ணு மயங்கும்
கூடு கட்டி வச்சிருக்கேன்
காலம் வரணும்
கொட்டு மேளம் கொட்ட
ஒரு நேரம் வரணும்
கேட்டது கண்டதில்லையே
ஏக்கமும் தாங்கவில்லையே
காதலுக்கு கண்ணு ரெண்டும் எங்கே
காத்திருக்கு பொண்ணு ரெண்டும் இங்கே
நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி
நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்
நெறமோ செவப்பு
நெனச்சா இனிப்பு
நேத்திக்கு தூக்கமில்ல ஏண்டி
நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி
நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்
மாமனுக்கு ஆச வந்தா
கைய கொடடி
மந்திரத்தை சொல்ல விட்டு
காத கொடடி
பேசணும்னு எண்ணம் வந்தா
பேச்சுக் கொடடி
பேசுவதை பேசி விட்டு
மூச்சு விடடி
ராத்திரி அள்ளிக் கொடுப்பான்
சாத்திரம் சொல்லிக் கொடுப்பான்
பக்கத்துல மன்னன் வந்த பின்னே
பாக்கட்டிலே நோட்டடிக்க வேண்டாம்
ஹா ஹா
நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி
நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்
புள்ளியிட்ட மானு
ரெண்டும் துள்ளுதடியோ
பூவுக்குள்ளே தேனிருந்து
பொங்குதடியோ
உள்ளுக்குள்ளே நூறு
கத தோணுதடியோ
உனக்கு மட்டும் சொல்லி
வச்சேன் கேட்டுக்கடியோ
என்னைக்கு
சொந்தம் வருமோ
பொண்ணுக்கு சொர்க்கம் வருமோ
மாலையிட்டு
வாழ்ந்திருப்போம் வாம்மா
மன்மதனை பூஜை செய்யலாமா
நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி
நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்
நெறமோ செவப்பு
நெனச்சா இனிப்பு
நேத்திக்கு தூக்கமில்ல ஏண்டி
மச்சானோ
அத்தானோ
மாயப் பொடி வச்சானோ
தொட்டானோ
பட்டானோ
தூது சொல்லி விட்டானோ
நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி
நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்
Keep listening
More from Pattakkathi Bhairavan
Pattakkathi Bhairavan
Pattakkathi Bhairavan
Pattakkathi Bhairavan
Pattakkathi Bhairavan
Pattakkathi Bhairavan