Idho Idho En Nenjile
From Vatathukkul Chadhuram · 1978
- Lyricist
- Panchu Arunachalam
- Singers
- S. Janaki, B. S. Sasirekha
- Music director
- Ilayaraja
- Details
- Vatathukkul Chadhuram1978
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
பெண் 1 :
இதோ இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்
பெண் 2 :
அதோ அதோ என் பாட்டிலே
ஒரே ராகம்
பெண் 1 :
கொடி நீ மலர் நான்
பெண் 2 :
கிளை நீ கனி நான்
இருவர் :
மனம் போல் வாழ்வோம்
துணை நீ....ஈ.....
இதோ இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்
பெண் 1 :
ஓடுது ரயில் பாரு
மனம் போலவே
பாடுது குயில் அங்கே
தினம் போலவே
பெண் 2 :
மாமரம் பூ பூத்து
விளையாடுது
காடெங்கும் புது வாசம்
பறந்தோடுது
பெண் 1 :
பார்த்தவை எல்லாம்
பரவசம் ஆக
புதுமைகள் காண்போம் எந்நாளுமே
பெண் 2 :
இனி வாழ்வில் நீதான்
என் சொந்தமே
இதோ இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே
ஒரே ராகம்
பெண் 1 :
தீபத்தின் ஒளியாக
ஒரு பாதி நான்
தேன் கொண்ட மலராக
மறு பாதி நீ
பெண் 2 :
காற்றினில் ஒலியாக
வருவேனடி
கனவுக்குள் நினைவாக
வருவாயடி
பெண் 1 :
நிலவுக்கு வானம்
நீருக்கு மேகம்
கொடிக்கொரு கிளைபோல்
துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான்
என் சொந்தமே....
பெண் 2 :
இதோ இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே
ஒரே ராகம்
பெண் 2 :
ஓடமும் நீரின்றி
ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே
வருவேனம்மா
பெண் 1 :
தோழமை உறவுக்கு
ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே
கேட்பேனம்மா
பெண் 2 :
உனக்கென நானும்
எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் எந்நாளுமே
இனி வாழ்வில் நீதான்
என் சொந்தமே
பெண் 1 :
இதோ இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே
ஒரே ராகம்
பெண் 1 :
ராமனின் குகன் ஆக
உனை பார்க்கிறேன்
மாலதி அனுவாக
நான் வாழ்கிறேன்
பெண் 2 :
இரு மனம்
அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம்
பண்பாடுது
பெண் 1 :
பறவைகள் போலே
பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம்
எந்நாளுமே
இனி வாழ்வில் நீதான்
என் சொந்தமே
பெண் 1 :
இதோ இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்
பெண் 2 :
அதோ அதோ என் பாட்டிலே
ஒரே ராகம்
பெண் 1 :
கொடி நீ மலர் நான்
பெண் 2 :
கிளை நீ கனி நான்
இருவர் :
மனம் போல் வாழ்வோம்
துணை நீ....ஈ.....
இதோ இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்
Keep listening
More from Vatathukkul Chadhuram
Vatathukkul Chadhuram
Vatathukkul Chadhuram
Vatathukkul Chadhuram